அபு (ABU) இயக்கத்திற்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தொடர்ந்து ஆதரவளிக்கும்.- ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மீண்டும் வலியுறுத்துகிறார் .
அம்னோ மற்றும் அதன் நாட்டாமை கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றி வஞ்சிக்கப்பட்ட , குறிப்பாக சிறுபான்மையினரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநியாயங்களை தகர்த்தெறிய உத்வேகம் கொண்டுள்ள தீபகற்ப மற்றும் கிழக்கு மலேசியாவில் இயங்கும் எந்த தரப்பினரோடும் ஹிண்ட்ராப் இணைந்து செயல் பட தாயராக இருக்கிறது என்ற எங்களின் நிலைபாட்டை மறு உறுதி செய்கிறோம் . அம்னோவின் ஆட்சியை ஒரு நிறைவுக்கு கொண்டுவரும் மிகப் பெரிய செயலை ஹிண்ட்ராப் அமைப்பு தனித்து செய்திடமுடியாது என்பதில் நாங்கள் என்றுமே தெளிவாக இருந்திருக்கிறோம்.
4 ஆம் தேதி டிசெம்பர் மதம் 2011 நடைபெற்ற 2 ஆவது ஹிண்ட்ராப் தேசிய மாநாட்டில் முன்மொழியப்பட்டு , பேராளர்களால் ஒருமனதாக ஏற்றுகொள்ளபட்ட தீர்மானத்தின் அடிபடையில் பன்முக வியூகங்களின் வழி அம்னோவுக்கு எதிராக செயல்படும் எந்த மூன்றாம் அணியினரோடும் அணுக்கமாக செயல்படுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது . இவ்வாறு செய்வதன் மூலம் 54 ஆண்டுகளாக வஞ்சிக்கப்படும் மலேசிய ஏழை இந்தியர்களுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால அபு (ABU) இயக்கத்தோடு இணைந்து செயல் படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் இந்த முடிவு எந்த தனி பட்ட நபராலும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதல்ல . பேராளர்களின் ஒட்டு மொத்த ஆதரவோடும் , அணைத்து மாநில/தேசிய ஒருங்கினைப்பாளர்களோடு பல மணி நேர ஆழமான விவாதங்கள் மற்றும் அறிவுபூர்வமான ஆலோசனைகளுக்கு பின்னர் மலேசிய இந்தியர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு இந்த முயற்சி கைகொடுக்கும் என தெளிவான முடிவிற்கு வந்த பின்னரே அபு (ABU) இயக்கத்தோடு இணையும் முடிவு எடுக்கப்பட்டது .
தெளிந்த சிந்தையோடு எடுகப்படிருக்கும் இந்த முடிவு தொடர்பாக ABU இயக்கத்திற்கு ஹிண்ட்ராப் ஆதரவு இல்லை என்றும் ஹிண்ட்ராப் ஆதரவளர்கள் ABU கூட்டங்களுக்கு செல்லவேண்டாம் என்று ஜெயதாசு மூலம் உதயகுமார் அறிக்கை வெளியிட்டிருப்பது வேண்டுமானால் அவரின் ம. உ. க கட்சியின் கருத்தாகவோ அல்லது சொந்த கருத்தாகவோ இருக்கலாமே தவிர ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் ஒட்டு மொத்த கருத்தை அவர் பிரதி பலிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறோம்.
எனவே ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அபு(ABU) இயக்கத்திற்கும் அது நடத்தும் நிகழ்வுகளுக்கும் பெருமளவில் கலந்து ஆதரவு அளிப்பதோடு இந்நாட்டு இந்தியர்களின் சுபிட்சத்திற்கு வழிவகுப்போம்.
ஹிண்ட்ராப் மக்கள் சக்தியும் அபு (ABU) இயக்கமும் இணைந்து எதிர்வரும் ஜனவரி 28 ஆம் தேதி பண்டார் சிரம்பான் செலத்தான் எனும் இடத்தில இரவு 8 .30 மணிக்கு மாபெரும் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர் . இந்நிகழ்வில் PAS துணை தலைவர் மாட் சாபு , அபு ஒருங்கிணைப்பாளர் ஹரிஸ் இப்ராஹீம் , ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைபாளர் வி.சம்புலிங்கம் மற்றும் செகு பாட் (SAMM ) ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர் . சிரம்பான் வாழ் இந்தியர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொல்லபடுகிறார்கள் . தொடர்புக்கு : 019 6944693 / 019 2171942