மாமன்னரை நேரில் சந்தித்து இந்தியர்களின் பிரச்சனைகளை விவரிக்கும் விருப்பத்தை பற்றுறுதியின் மூலம் ஹிண்ட்ராப் வெளிப்படுத்தியது.


ஐவர் அடங்கிய ஹிண்ட்ராப் உயர்மட்ட பொறுப்பாளர்கள் அதன் தேசிய ஆலோசகர் திரு ந.கணேசன் அவர்களின் தலைமையில் இன்று தேசிய அரண்மனையில் இரண்டாம் முறையாக மலேசியாவின் 14 ஆவது மாமன்னராக அரியணை ஏறியிருக்கும், பெருமதிப்பிற்குரிய துவாங்கு அல்ஹாஜ் அப்துல் ஹாலிம் முஆட்சாம் ஷாஹ் இப்னி அல்மஹ்ரும் சுல்தான் பட்லிஷாஹ் அவர்களுக்கு தங்களின் ராஜ மரியாதையையும் , ராஜ விசுவாசத்தையும் உறுதி படுத்தினர்.

அரசியல் சட்ட அமைப்பின்படி இந்நாட்டின் யாங் டிபெர்துவான் அகோங்காக இரண்டாம் முறையாக தேர்வுபெற்றமைக்கு வாழ்த்துகளையும் அதே நேரத்தில் மலேசியாவின் குடிமக்கள் என்ற முறையில் தங்களின் விசுவாசத்தை மாமன்னரிடம் தெரிவிக்கும் பற்றுறுதியை அவரின் அந்தரங்க காரியதரசியின் தனிச் செயலாளர் புவான் ஜைனப் அவர்களிடம் இந்த உயர்மட்ட குழு சமர்பித்தாக ஹிண்ட்ராப் மக்கள் சக்தின் ஊடக தொடர்பாளர் திரு க.சந்திரமோகன் தெரிவித்தார். ஐந்து பக்கங்கள் கொண்ட பற்றுறுதி மகஜரில் மலேசியாவின் வளப்பத்திற்கு இந்தியர்கள் ஆற்றிய பங்கையும் , அவர்கள் இன்று அனுபவிக்கும் சமூக பொருளாதார அவலங்கள் கேட்பாரற்று இருக்கும் நிலைமையையும் தெளிவாக விவரித்துள்ளதோடு இந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் ஹிண்ட்ராப் அமைப்பை சட்ட ரீதியாக அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் மாமன்னர் அரசை கேட்டுக்கொள்ளவேண்டும் என்றும் கேடுக்க்கொள்ளப் பட்டிருப்பதாக திரு கணேசன் கூறினார். இந்தியர்களின் குறைபாடுகளை மாமன்னரிடம் நேரிடையாக விவரிக்கும் வகையில் அவரை சந்திக்க விருப்பம் கொடுள்ளதையும் இந்த பற்றுறுதியின் மூலம் வெளிப்படுத்தி இருபதாகவும் அவர் மேலும் கூறினார். பற்றுறுதியை பெற்றுக்கொண்ட புவான் ஜைனப் ஹிண்ட்ராபின் கோரிக்கைகளை தாம் நிச்சயம் மாமன்னரின் கவனத்திற்கு கொடு செல்வதாக வாக்களித்தார் என்றும் அரண்மனை நிர்வாகத்திடமிருந்து தங்களுக்கு சாதகமான பதில் விரைவில் கிட்டும் என்று தாம் எதிர்பார்பதாக அவர் மேலும் கூறினார் . இந்நிகழ்வு பிரவரி மாதம் 14 ஆம் தேதி காலை மணி 11 .30 க்கு கோலாலம்பூர் தேசிய அரண்மனையில் இடம்பெற்றது. ஹிண்ட்ராப் சார்பில் திரு ந.கணேசன், தேசிய ஒருங்கினைப்பளார்வி.சம்புலிங்கம் , சிலாங்கூர் ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் க.தமிழ்செல்வம் , ஹிண்ட்ராப் ஊடக தொடர்பாளர் திரு க. சந்திரமோகன் ,திருமதி சாந்தி ஆகிய ஐவர் அடங்கிய குழு இப்பற்றுருதியை வழங்கினர். இவர்களுடன் சிலாங்கூர் மாநில ஹிண்ட்ராப் அமைப்பின் ஏனைய பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் வருகை புரிந்திருந்தனர். இந்த வருகை குறித்து கடந்த 8 ஆம் தேதி அரண்மனை நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களுக்கு முறையான வரேவேற்பு நல்கபட்டதாகவும் , மிகவும் சுமூகமான முறையில் இந்த சந்திப்பு நடந்தேறியதாகவும் திரு சந்திரமோகன் குறிப்பிட்டார் .



Copyright 2011 Hindraf - மாமன்னரை நேரில் சந்தித்து இந்தியர்களின் பிரச்சனைகளை விவரிக்கும் விருப்பத்தை பற்றுறுதியின் மூலம் ஹிண்ட்ராப் வெளிப்படுத்தியது. . Designed by Joomla templates. All Rights Reserved.