ஊளையிடும் குள்ளநரிகளின் சல சலப்புக்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி பதில் சொல்ல அவசியமில்லை.

munian.jpgகாற்றடிக்கும் திசையில் சாயும்  நாணலை போல கொள்கை இல்லா பச்சோந்தி  ஒன்று ஹிண்ட்ராப் பற்றியும்  அதன் தன்னலம் கருதா தலைவர் வேதமூர்த்தியை  பற்றியும்  விமர்சனம் செய்து அதன் மூலம் மலிவு  விளம்பரம் தேட
முற்ப்பட்டு நேற்றைய தினசரி ஒன்றில்  அறிக்கை விட்டுள்ளதை கண்டு
சிரிப்புதான் வருகிறது.


மலேசிய இந்தியர்களின் அவலங்களையும் அதற்கு காரணமானவர்களையும்
அடையாளங்காட்டி துணிச்சலாக குரல் கொடுக்கும் ஹிண்ட்ராப் இயக்கத்தை இது
போன்ற குள்ளநரிகளின் ஓலம் ஒன்றும் செய்துவிட முடியாது.

ஹிண்ட்ராப் ஏற்படுத்திய சூறாவளியால்  நாடாளுமன்றத்திற்கு மக்களால்
அனுப்பப்பட்டவர்கள்  இந்தியர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பார்கள்
என்று எதிர்பார்த்த நேரத்தில் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்ததைப்போல,
ஹிண்ட்ராப்பின் கணக்கை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். பாரிசான் நேசனலின் உள்துறை
அமைச்சர் விசாரணையில் ஹிண்ட்ராப் கணக்கில் எவ்வித குளறுபடியும் இல்லை
என்று  நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் பதில் தந்ததை அணைத்து ஊடகங்களும்
வெளியிட்டதை அனைவரும் அறிவர்.

அதற்கும் ஒருபடி மேலே சென்று ஹிண்ட்ராப் தமது கணக்காய்வாளர் நிறுவனத்தின்
 ( charted  accountant ) மூலம் வசூலிக்கப்பட்ட அணைத்து சில்லறை
காசுக்கும் ஊடகங்களின் மூலம் தெளிவான கணக்கரிகையை 2010 ஆம் ஆண்டே
வெளியிட்டு  கணக்கு கேட்ட அனைவரின் வாயையும் அடைத்துவிட்டது.

நாளுக்கு ஒரு கட்சியில், கொள்கை பிடிப்பே இல்லாதவர்களுக்கு  இதைப்பற்றி
தெரிந்திருக்க ஞானம் இருக்க வாய்ப்பில்லைதான்.அதே நேரத்தில் விலை போகாத
இந்த அரைவேகாட்டின் ஒப்பாரியை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள்
கிடையாது.

வேதமூர்த்தி லண்டனில் வாழும் உண்மையான பரிதாப நிலையை நாங்கள் அறிவோம் .
சொகுசு வாழ்க்கைக்கு  வாழ  ஆசைப்படும் சராசரி மனிதனால் ஹிண்ட்ராப்
இயக்கத்தை தலைமை தாங்கி வழிநடத்த முடியாது. இன்னும் கொஞ்ச நாள்
பொருத்துகொள்ளுங்கள் தலைவர் வேதமூர்த்தி லண்டனில் என்ன செய்து
கொண்டிருக்கிறார் என்பது இந்த சந்தர்ப்பவாதிக்கு மட்டும் அல்ல
உலகத்துக்கே தெரியத்தான் போகிறது.

முனியாண்டி,
லூனஸ், கடாரம் .
மாநில துணை ஒருங்கிணைபாளர்



Copyright 2011 Hindraf - ஊளையிடும் குள்ளநரிகளின் சல சலப்புக்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி பதில் சொல்ல அவசியமில்லை.. Designed by Joomla templates. All Rights Reserved.